Sunday, November 29, 2009

நான் ஒரு குழந்தை

நான் இந்த பகுதிக்கு புதியவள் என்பதால் என்னுடைய தவறுகளை நீங்கள் எல்லோரும் பெரிது படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை நான் மறுக்கிறேன். ஒரு குழந்தை எடுத்து வைக்கும் முதல் அடி கோணலாக தான் இருக்கும் அதனால் அது பிற்காலத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கோணலாக இருக்கும் என்று சொல்ல முடியாது. தவறுகள் தான் முன்னேற்ற படிகள். நான் என்னுடைய தவறுகளை திருத்தி கற்றுகொள்ள நினைக்கிறேன். இந்த பகுதியை படிப்பவர்கள் அனைவரும் என்னுடைய தவறுகளை குறிப்பிடவும். நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனில் நான் ஒரு குழந்தை.