Thursday, July 8, 2010
எங்க வீட்டு செல்லம்
செல்லம் நீதான் என்ன ஒரு அழகுடி. நீ நடந்தால் நடை அழகு. ஒரு கம்பீரம். என்ன ஒரு சுறுசுறுப்பு. உன் முடிதாண்டி உனக்கு அழகு. நீ பாக்கற பார்வையே தனி. என்ன பார்வை உந்தன் பார்வை.
எங்கள் செல்லம் ரொம்ப sensitive. அவளை தனிய விட்டுட்டு வெளிய போனா அவளுக்கு செம கோவம் வரும் பாருங்க நம்மள ஒரு வழி பண்ணிடுவா. நம்ம கூடவே இருந்தா ரொம்ப சமத்தா இருப்பா. வீட்டுக்குள்ள நான் என்ன வேலை செய்தாலும் என் பின்னாலேயே சுத்துவா. சாயந்தரம் ஆனா அவகூட நான் பால் விளையாடனும், அவளை கொஞ்சனும். அவளுக்கு மட்டன் சிக்கன் தான் ரொம்ப புடிக்கும் அப்பப்ப தயிர் சாதம் சாப்பிடுவா. பிஸ்கட் புடிக்கும். பால் ரொம்ப இஷ்டம் குளிக்கும் போது ரொம்ப தான் பீல் பண்ணிக்குவா. லேசில குளிக்க மாட்டா.
எங்க செல்லம் பேரு என்ன தெரியுமா? அவ பேரு ப்ரூனி. ஆமாங்க எங்க வீட்டு பெட்அவ. நீங்க அவளை நாய்னு சொல்லாதீங்க எங்க வீட்டுல எல்லாரும் அடிக்க வருவாங்க. எங்க வீட்டு செல்லம் அவ தெரியுமா. சொல்லிபுட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment